தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரியில் 26 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு!

By

Published : Dec 29, 2019, 10:42 PM IST

கன்னியாகுமரி: தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

candidate
candidate

தமிழ்நாட்டில் இரண்டுகட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27ஆம் தேதி முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (டிச.30) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கு டிச.30ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

போட்டியின்றித் தேர்வான வேட்பாளர்கள்

138 ஊராட்சி உறுப்பினர்கள் அமைந்துள்ள தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் செண்பகராமன்புதூர், தோவாளை, சகாயநகர் உள்பட பதினாறு ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அருமநல்லூர் ராஜேஷ்வரி, தெரிசனந்தோப்பு சாந்தி, கடுக்கரை முத்து லட்சுமி உள்பட 26 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கான சான்றிதழ்களைத் தேர்தல் அலுவலர் வழங்கினார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக வேலைப் பார்த்த கடையில் திருடியவர் சிக்கியது எப்படி?

Intro:கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.Body:tn_knk_01_vetpalar_certificate_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் 27 ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கு 30 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.அதற்குன்டான மனு தாக்கல் மனுக்கள் பரிசீலனை முடிந்துள்ளது. இதில் 138 ஊராட்சி உறுப்பினர்கள் அமைந்துள்ள தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் செண்பகராமன்புதூர் தோவாளை சகாயநகர் உட்பட பதினாறு ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அருமநல்லூர் ராஜேஷ்வரி தெரிசனந்தோப்பு சாந்தி கடுக்கரை முத்து லட்சுமி உட்பட 26 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்குன்டான சான்றிதழ்களை தோவாளை ஊரட்சி ஒன்றிய ஆனையாளர் இங்கர்சார் பூதப்பாண்டியில் அமைந்துள்ள தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் வைத்து வழங்கினார்.
Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details