தமிழ்நாடு

tamil nadu

கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி: லாரி மோதி உயிரிழப்பு

By

Published : Jun 27, 2022, 5:02 PM IST

காஞ்சிபுரம் அருகே கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம்: மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பரமேஸ்வரி (37) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவிட்டு ஆறுமுகம் இன்று காலை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து தனது கணவர் ஆறுமுகத்தை அழைத்து வர அவரது மனைவி பரமேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் அன்னை இந்திரா காந்தி சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த புதைவடிகால் இணைப்பு பள்ளத்தினை தவிர்ப்பதற்காக வலது பக்கமாக தனது இருசக்கர வாகனத்தை சற்று வளைத்துச் சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத விதமாக இவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்

இதையடுத்து இவ்விபத்து குறித்து தகவலறிந்த சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (37) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவ்விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழப்பு - சோகத்தை ஏற்படுத்தும் முழுப்பின்னணி

ABOUT THE AUTHOR

...view details