தமிழ்நாடு

tamil nadu

திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது

By

Published : Jul 29, 2021, 12:55 PM IST

காஞ்சிபுரத்தில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருமணத்தை மீறிய உறவு
திருமணத்தை மீறிய உறவு

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு மகளும், ஒரு மகனுன் உள்ளனர்.

கடந்த 23ஆம் தேதி முதல் தனது கணவர் அன்பழகனை காணவில்லை என அவரது மனைவி ஷோபனா சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அவரது கணவர் அன்பழகன் காணாமல் போன நாளன்று அவரது மனைவி ஷோபனாவும் தலைமறைவாகியுள்ளார்.

மனைவியை கண்டித்த கணவர்

இதனால், சந்தேகமடைந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் ஷோபனாவை ஜூலை 27ஆம் தேதி பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் தர்மராஜ் என்பவருக்கும், ஷோபனாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்தது. தர்மராஜுக்கு, ஷோபனா தூரத்து உறவில் சித்தி முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கடந்த ஒன்றரை வருடங்களாக அன்பழகன் வீட்டிலேயே தங்கியுள்ளார். இவ்வேளையில் தனது மனைவி ஷோபனாவுக்கும், தர்மராஜுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பது அன்பழகனுக்கு தெரியவந்தது. இதனால், மனைவி சோபனா, தர்மராஜ் ஆகியோரை அன்பழகன் பலமுறை எச்சரித்து வந்துள்ளார்.

கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி

இந்நிலையில், தங்களுக்கு இடையூறாக இருக்கும் அன்பழகனை கொலை செய்ய சோபனா தீட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 23ஆம் தேதி அன்பழகன் தூங்கி கொண்டிருந்தபோது சோபனா, தர்மராஜ் அவரது நண்பரான விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து தர்மராஜை கத்தியால் குத்தி கொலை செய்து கொசஸ்தலை ஆற்றங்கரைப் பகுதியில் புதைத்தும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சோபனாவை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த தர்மராஜ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அன்பழகன் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதையடுத்து, அன்பழகனின் உடல் வெளியே எடுக்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம்

ABOUT THE AUTHOR

...view details