தமிழ்நாடு

tamil nadu

காதலுக்கு இடையூறு... கணவரை கொன்று எரித்த மனைவி

By

Published : Aug 12, 2021, 6:23 AM IST

மணிமங்கலம் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று எரித்த மனைவி, 13 நாள்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மனைவி
காதலுக்கு இடையூறு

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்தவர் தங்கவேல் (44). இவருக்கு விமாலா ராணி (37) என்ற மனைவியும், ஹரிஷ் ராகவ் (14) என்ற மகனும் உள்ளனர். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரது மனைவி விமலா ராணி மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து, பலமுறை தங்கவேலின் தொலைபேசியை தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சந்தேகமடைந்த சக்திவேல், இதுகுறித்து தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக வீட்டிற்கு சென்று தங்கவேலின் தந்தை பார்த்தபோது, அங்கு யாரும் இல்லாததால், மணிமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகன் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலா ராணி, அவரது மகன் ஹரிஷ் ராகவ் உடன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனது கணவரை கடந்த மாதம் 28ஆம் தேதி மதியம், தங்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்தார். இதன் காரணமாக அருவாமனையால் அவரது கழுத்தில் 2 முறை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

அவரது சடலத்தை இரவு 10 மணி ரை, வீட்டின் படுக்கையறையில் மறைத்து வைத்திருந்தேன். பின்னர், தனது காதலனான சேலத்தை சேர்ந்த ராஜாவை வரவழைத்து, அருகில் உள்ள ஏரியில் தங்கவேலின் உடலை வீசி விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலத்தை கண்டுபிடித்த காவல் துறை

ஆனால், ஏரியிலிருந்து உடலை எடுக்க சென்றபோது, அவரது உடல் இங்கு இல்லை என விமலாராணி முன்னுக்கு முரணாகக் கூறியுள்ளார். அதன்பின் விமலா ராணி அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த 2ஆம் தேதியன்று செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே பாதி எரிந்த நிலையிலிருந்த உடல், கொலை செய்யப்பட்ட தங்கவேலின் உடல் என்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து மணிமங்கலம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விமலா ராணியை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய ராஜாவை 3 தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:பாலியல் சீண்டல் செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details