தமிழ்நாடு

tamil nadu

கணவனை கொன்ற மனைவி - குடும்ப தகராறு காரணமாக வெறிச்செயல்

By

Published : Jul 30, 2021, 2:40 PM IST

காஞ்சிபுரத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி

பெரிய காஞ்சிபுரம் மளிகை தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நவ்ஷாத். இவர், சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர், ரேவதி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, அவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள், மகன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

நவ்ஷாத் - ரஷியா

மனைவியுடன் கணவர் தகராறு

இந்நிலையில், நவ்ஷாத்திற்கு ஆட்டோ தொழில் சரிவர நடைபெறாத காரணத்தால் வருமானம் குறைந்துள்ளது. இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நவ்ஷாத் குடிபோதைக்கு அடிமையாகி மனைவி ரஷியாவுடன் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல நவ்ஷாத் நேற்றிரவு (ஜூலை 29) குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

கணவரை கொலை செய்த மனைவி

இதில் ஆத்திரமடைந்த ரஷியா, அருகில் இருந்த கத்தியை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த நவ்ஷாக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

உயிரிழந்த நவ்ஷாத்

இதையடுத்து, ரஷியா சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். கொலை சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த நவ்ஷாத் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தானாக வந்து சரணடைந்த ரஷியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக நடந்த கொலையால் இரு குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நவ்ஷாத் குடும்பத்தினர், இந்தக் கொலையை ரஷியா மட்டும் செய்திருக்க முடியாது, வேறு யாரோ உடனிருந்து செய்துள்ளனர் என சந்தேகத்தை எழுப்பியுள்ளதால் சிவகாஞ்சி காவல் துறையினர், கொலை சம்பவம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தம்பிக்கு வீசிய வலையில் சிக்கிய அண்ணன்... ஓட ஓட விரட்டி படுகொலை

ABOUT THE AUTHOR

...view details