தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்- கொட்டும் மழையில் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

By

Published : Dec 7, 2020, 5:30 PM IST

காஞ்சிபுரம்: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான 'போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை' திட்டத்தை கைவிடும் மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

vck protest
vck protest

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான 'போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை' திட்டத்தை மோடி அரசு கைவிடுவதாக முடிவு செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் போராடி பெற்ற இந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை மோடி அரசு கைவிடுவதாக முடிவு செய்துள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மறைமுகமாக தடுக்கும் சதியை செய்து வருகிறது.

மறைமுகமாக மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று (டிச.7) மாநிலம் முழுவதும் விசிக சார்பில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை' நிறுத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் கொட்டும் மழையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் காந்தி சாலை பெரிய தூண் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:பரோல் முடிந்து சிறை திரும்பிய பேரறிவாளன்: விடுதலைக்காக காத்திருக்கும் அற்புதம்மாள்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details