தமிழ்நாடு

tamil nadu

காஞ்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் வழக்கறிஞர் வெட்டி படுகொலை!

By

Published : Apr 12, 2021, 10:51 PM IST

காஞ்சிபுரம்: வழக்கறிஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர்
வழக்கறிஞர்

காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகரசன் (40). வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த இவர் சமூக ஆர்வலராகவும் இருந்தார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய காரை கிராமத்திற்குச் செல்லும் வழியில் தனது நண்பர் சங்கருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அழகரசனை பயங்கர ஆயுதங்களால் தலை, கை, கால்களில் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தடுக்க முயன்ற அழகரசன் நண்பர் சங்கரும் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அழகரசனின் உடலை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஐஸ் பெட்டியில் வைத்து கஞ்சா கடத்தல்: பெண் உள்பட இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details