தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரத்தில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் திடீர் ஆய்வு

By

Published : May 26, 2021, 7:36 PM IST

காஞ்சிபுரம்: ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு பணிக்குழுவிலுள்ள தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளையும், ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் சிறப்புப் பணிக் குழுக்களை நியமித்து உள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கான சிறப்பு பணிக்குழு தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் ஆக்ஸிஜன் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து டாக்டர் தாரேஸ் அகமது இன்று ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள (war room) கட்டளை மையத்தை பார்வையிட்டு அலுவலர்களுக்குப் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார். அதையடுத்து தாயார் குளம், வெள்ள குளம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில், நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் தகனம் செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு ஆக்ஸிஜன் இருப்பு, மற்றும் படுக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயசுதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பழனி, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நடமாடும் அங்காடி:'அதிகாலை 5 மணிக்கே காய்கறிகளை பெற்றுச் செல்ல வேண்டும்'- காஞ்சிபுர ஆணையர் மகேஸ்வரி!

ABOUT THE AUTHOR

...view details