தமிழ்நாடு

tamil nadu

நீர்நிலைகளில் உள்ள குடியிருப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு - ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள்

By

Published : Sep 10, 2022, 3:28 PM IST

பொன்னேரிக்கரை நீர்நிலை ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புகளை அகற்றவந்த அதிகாரிகளையும், அரசாங்கைத்தையும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் பருவமழையின் போது ஆங்காங்கே தண்ணீர் செல்ல வழியின்றி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. இதன் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றமானது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரிக்கரை ஒட்டிய நீர்நிலையில் ஆக்கிரமிப்பிலுள்ள சுமார் 82 வீடுகளை இன்று (செப்.10) அகற்றப்போவதாக வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்தனர். வருவாய்த் துறையினரின் இந்த அறிவிப்பால் நீர் நிலை ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது வீடுகளை அகற்ற வேண்டாம் எனக் கோரிக்கையையும் முன் வைத்தனர்.

குடியிருப்பை அகற்றும் நடவடிக்கைக்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை வேண்டுமானால் தள்ளி வைக்க மட்டுமே முடியுமெனவும், ஒரு வாரம் வேண்டுமானால் நீங்கள் குடியிருப்புகளை காலி செய்ய அவகாசம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தாங்கள் எதுவும் இவ்விவகாரத்தில் செய்ய முடியாது, இது நீதிமன்ற உத்தரவு என மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வாசிகளிடம் அறிவுறுத்தினார்.

நீர்நிலைகளில் உள்ள குடியிருப்பை அகற்றும் நடவடிக்கைக்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதி பகுதியிலுள்ள பொன்னேரிக்கரை ஏரியை ஒட்டி நீர் நிலைகளில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் சாலையில் அமர்ந்து தங்களது குடியிருப்புகளை அகற்ற வேண்டாம் எனவும், இத்தகைய நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் எனக் கண்ணீர் மல்க முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: ஒரு மேடையில் 80 விழுக்காடு... மற்றொரு மேடையில் 70 விழுக்காடு... முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்...

ABOUT THE AUTHOR

...view details