தமிழ்நாடு

tamil nadu

சாம்பாரில் எலி செத்த நாத்தம்! - நியாயம் கேட்ட வாடிக்கையாளரின் வைரல் வீடியோ!

By

Published : Oct 12, 2019, 11:57 PM IST

காஞ்சிபுரம்: தரமற்ற உணவு வழங்கியதற்காக, உணவக உரிமையாளரிடம் நியாயம் கேட்ட வாடிக்கையாளரை அவர் அவதூறாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜகணபதி ஓட்டல்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது ராஜகணபதி ஓட்டல். இங்கு வாடிக்கையாளர் ஒருவர் புரோட்டாவும், சாம்பர் சாதமும் வாங்கியிருக்கிறார். அவர் வாங்கிய அந்த சாம்பரில் எலி செத்த நாத்தம் அடித்ததாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளரை அவதூறாக பேசிய ராஜகணபதி ஓட்டல் உரிமையாளர்

இதை உணவகத்தின் உரிமையாளரிடம் சென்று கேட்டதற்கு அவர் வாடிக்கையாளர் அவதூறாக பேசி கடையை விட்டு விரட்டியடித்துள்ளார். வாடிக்கையாளர் நியாயம் கேட்டபோது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தரமற்ற உணவுகளை வழங்கிய அந்த உணவு விடுதியின் மீதும், தகாத வார்த்தைகளை பேசிய உரிமையாளரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படியுங்க:

முழுக்கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - கரையோரப் பகுதியினருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Intro:Body:

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ராஜகணபதி ஓட்டலில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவு குறித்து அவரே எடுத்த வீடியோ. மேலும் இது குறித்து கேட்ட வாடிக்கையாளரை ஓட்டல் நிர்வாகி  தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேற்றி உள்ளார்


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details