தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தல் - வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்

By

Published : Oct 6, 2021, 4:06 PM IST

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் மாற்றி, அச்சடித்துள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்
வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில் காலை 7 மணி முதல் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது.

கிராம மக்கள் மிகுந்த ஆர்வமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவருக்காக லட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். இவருடைய பெயரை தனலட்சுமி என அச்சடித்து வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பெயர் தவறான காரணத்தினால் தனது வெற்றி பாதிக்கும் எனக் கருதி வேட்பாளரும் அவரது முகவர்களும் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்

வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மாற்றம்

அந்த வாக்குச் சீட்டில் பெயர் திருத்தம் செய்து வாக்காளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் அலுவலர்கள் கூறினர்.

இதற்கு வேட்பாளர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details