தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jun 27, 2022, 9:43 PM IST

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம்: கோயில் நகரமும், சுற்றுலாத்தலமானதுமான காஞ்சிபுரம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. பட்டு சேலை வாங்கவும் கோயில்களில் தரிசனம் செய்யவும் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சந்திப்புகளில் ஒன்றான மூங்கில் மண்டபம் பகுதியில் இருந்து காந்திசாலை தேரடியிற்கு சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று ஆட்டோவை முந்தி சென்றது. அப்போது எதிரே வந்த மற்றொரு உணவு டெலிவரி செய்யும் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சிசிடிவி காட்சி

இவ்விபத்தில் லேசான காயமடைந்த இருவரையும் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:வழக்கறிஞருடன் ஓபிஎஸ் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details