தமிழ்நாடு

tamil nadu

கொடி நாள் நன்கொடை: நிதி வசூலை தொடங்கிவைத்த ஆட்சியர்

By

Published : Dec 7, 2020, 1:10 PM IST

காஞ்சிபுரம்: முப்படை வீரர்கள் கொடி நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நன்கொடை வழங்கி கொடிநாள் நிதி வசூலை தொடங்கிவைத்தார்.

armed forces flag day
armed forces flag day

முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவுகூறும் வகையில், முப்படையினர் கொடி நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், கொடி நாளன்று திரட்டப்படும் நிதி, நன்கொடைகள் முன்னாள் படை வீரர்கள், போரில் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான படை வீரர்கள், போரில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்காக தமிழ்நாடு அரசின் முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதனையடுத்து இன்று (டிசம்பர் 7) கொடிநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தனது பங்களிப்பாக ரூ.4 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கி கொடி நாள் நிதி வசூலை தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள், திரளான பொதுமக்களும் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details