தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் தபால் வேலை பார்க்கலாம், தபாலை பிரித்துப் பார்க்கக் கூடாது- கி.வீரமணி

By

Published : Apr 13, 2022, 10:02 AM IST

Updated : Apr 13, 2022, 12:39 PM IST

ஆளுநர் தபால்காரர் வேலை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர அனுப்பும் தபால்களைப் பிரித்துப் பார்க்கும் வேலை செய்தால் அது அதிக பிரசங்கித்தனம்; யாருக்கும் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையாக உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

k-veeramani-says-national-education-policy-of-central-govt-is-that-education-should-not-be-taught-to-anyoneஆளுநர் தபால் வேலை பார்க்கலாம், தபாலை பிரித்துப் பார்க்கக் கூடாது- கி.வீரமணி
k-veeramani-says-national-education-policy-of-central-govt-is-that-education-should-not-be-taught-to-anyone ஆளுநர் தபால் வேலை பார்க்கலாம், தபாலை பிரித்துப் பார்க்கக் கூடாது- கி.வீரமணி

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பரப்புரைப் பயணக் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 3ஆம் தேதியன்று நாகர்கோவிலில் தொடங்கிய இந்தப் பரப்புரை 25ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இதனையடுத்து, அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் வீதியில் நடைபெற்ற பரப்புரைப் பயண பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.

அப்போது அவர் பேசுகையில், "மாநில அரசு நேரடியாக மத்திய அரசை அணுக நேரம் இல்லாத காரணத்தினால் தான் டெல்லியில் இருந்து எஜெண்ட் (ஆளுநர்) என்ற ஒரு நபரை நியமித்து உள்ளனர். அவர் தபால்காரர் வேலை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, அனுப்பும் தபால்களைப் பிரித்துப் பார்க்கும் வேலை செய்தால் அது அதிக பிரசங்கித்தனமாக தான் இருக்கும். நாம் அந்தத் தபால்காரரை என்ன செய்ய வேண்டும், அவர் திரும்பி போகின்ற நேரம் வரும், இது அரசியல் சட்டத்தில் உள்ளது.

ஆளுநர் தபால் வேலை பார்க்கலாம், தபாலை பிரித்துப் பார்க்கக் கூடாது- கி.வீரமணி

ஆகையால் அரசியல் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும். மாநில உரிமைகளை இவர்கள் பிரிக்கின்றார்கள், மத்தியில் இருப்பவர்கள் இங்கு ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகக் குறுக்கு வழியில் இவ்வாறு செய்கிறார்கள்.

ஆட்சிகள் மாறலாம் ஆனால் அடிப்படை தத்துவங்கள் ஒன்றுதான். பள்ளியில் மதிய உணவு, புத்தகம், செருப்பு, சீருடை என இவையெல்லாம் கொடுத்து மாணவர்களைப் படி படி என கொள்கை வைத்தால், மத்திய அரசு இவர்களைப் படிக்காதே என்பதனை தான் கொள்கையாக வைத்துள்ளது.

மத்திய அரசு வைத்துள்ள தேசியக் கல்விக் கொள்கையான நேஷனல் எஜிக்கேசன் பாலிசியை (NEC) சரியாகப் பார்த்தல் நோ எஜிக்கேசன் பாலிசி என்பதைப்போல் தான் உள்ளது. யாருக்கும் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடாது என்பது தான் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையாக உள்ளது" என மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

இந்நிகழ்வில் திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன், மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா என திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'CUET' நுழைவுத் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Last Updated : Apr 13, 2022, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details