தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று நீர் திறப்பு...!

By

Published : Nov 2, 2022, 12:29 PM IST

தொடர் மழை காரணமாக செம்பம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர் கன மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு
தொடர் கன மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு

காஞ்சிபுரம்: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரால், சென்னை மற்றும் புறநகரில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவ மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 3 மணியளவில் 100 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

இன்று காலை ஆறு மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,180 கனடியாகவும், ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 20. 64அடி கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் எரியில் 3.645 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும், தற்போதைய நிலவரப்படி சுமார் 2.764 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் கடந்த 24மணி நேரத்தில் சுமார் 9 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் கரையோர பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பேருந்துக்குள் மழை.. தொடரும் அவலம்..

ABOUT THE AUTHOR

...view details