தமிழ்நாடு

tamil nadu

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் 42ஆவது பாதயாத்திரை!

By

Published : Jan 10, 2020, 7:44 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பாதயாத்திரை விழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை பால்குடம் ஏந்தி வழிபட்டனர்.

from-chennai-vadapalani-to-kanchi-kamatchi-temple-devotees-went-devotees-yatra
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் 42வது பாதையாத்திரை!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் பக்தர்கள் திரு பாதயாத்திரை சபை சார்பில் 42ஆம் ஆண்டு பாதயாத்திரை விமரிசையாக நடைபெற்றது.

இதில் கடந்த புதன்கிழமை வடபழனி முருகன் கோயிலிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு இன்று காலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இவ்விழாவினை காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தொடங்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பால்குடம் ஏந்தி பாதயாத்திரையாக வந்து காஞ்சி காமாட்சி அம்மன் பேரருளைப் பெற்று சென்றனர்.

விழா ஏற்பாட்டினை வடபழனி ஆண்டவர் திருக்கோயில் தக்கார் ஆதிமூலம் துணை ஆணையர் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் 42வது பாதையாத்திரை!

இதையும் படியுங்க: தோடர் இன மக்கள் கொண்டாடிய 108ஆம் ஆண்டு தேர்த்திருவிழா

Intro:ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் பக்தர்கள் திருபாதயாத்திரை சபை சார்பில் நாற்பத்தி இரண்டாவது ஆண்டு திரு பாதயாத்திரை விழா விமர்சியாக நடைபெற்றது
Body:
சென்னை வடபழனி சேர்ந்த ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் பக்தர்கள் திரு பாதையாத்திரை சபை சார்பில் 42 ஆம் ஆண்டு பாதயாத்திரை விமர்சையாக விமரிசையாக நடைபெற்றது. இதில் கடந்த புதன்கிழமை வடபழனி முருகன் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு இன்று காலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து அம்பாளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர் இவ்விழாவினை காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துவக்கி வைத்தார் இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பால்குடம் ஏந்தி பாதயாத்திரையாக வந்து காஞ்சி காமாட்சி அம்மன் பேரருளைப் பெற்று சென்றனர்.Conclusion:விழா ஏற்பாட்டினை வடபழனி ஆண்டவர் திருக்கோயில் தக்கார் ஆதிமூலம் துணை ஆணையர் சித்ராதேவி ஸ்ரீகாந்த் சத்யராஜ் செல்வராஜ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்

ABOUT THE AUTHOR

...view details