தமிழ்நாடு

tamil nadu

சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய லாரி  - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Oct 29, 2022, 10:41 AM IST

காஞ்சிபுத்தில் சாலையை கடக்க முயன்றபோது மாநகராட்சி குப்பை லாரி மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி பகுதியில் கிளார் பகுதியைச் சேர்ந்த முருகன் என்னும் முதியவர் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் உயிரிழந்தார்.

சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர்வர் முருகன்(64). இவர் நேற்றிரவு (அக். 28) மேற்கு ராஜவீதியில் நடந்து சென்ற போது சாலையை கடக்க முற்பட்டார். அப்போது அதிவேகமாக வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியின் குப்பை லாரியானது முருகன் மீது மோதியது. இதனால் சம்பவயிடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாநகராட்சி மினி குப்பை லாரி ஓட்டுநரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்தத்தை கைது செய்து சிவகாஞ்சி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் கோவை கார் விபத்து... போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்...

ABOUT THE AUTHOR

...view details