தமிழ்நாடு

tamil nadu

'எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனை திமுக சமாளிக்கும்!'

By

Published : Jun 7, 2021, 10:15 PM IST

Updated : Jun 7, 2021, 10:33 PM IST

காஞ்சிபுரம்: கரோனா மூன்றாவது அலை உள்ளிட்ட எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனைச் சமாளிக்க தயாராக உள்ளதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Corona vulnerability situation in Kanchipuram district
Corona vulnerability situation in Kanchipuram district

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ மையத்தை ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று திறந்துவைத்து இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு பொது மருத்துவமனைகளில் 1,244 படுக்கைகளில் 625 ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதேபோல்
தனியார் மருத்துவமனைகளில் 1080 படுக்கையில் 385 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,324 படுக்கைகளில் 1010 படுக்கைகள் ஆக்சிஜன் கொண்ட படுக்கைகளாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளன. கடந்த ஒரு வார காலமாக சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.

'எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனை திமுக சமாளிக்கும்!'

மேலும் கரோனா மூன்றாம் அலை வரவுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதனை எதிர்கொள்ள திமுக அரசு வேக வேகமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகளை அதிகரித்துவருகின்றன. ஆகையால் கரோனா மூன்றாம் அலைகள் வந்தாலும், தொற்று பாதிப்பு அதிகமானாலும், எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனைச் சமாளிக்க திமுக அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.

'எத்தனை பெரிய அலைகள் வந்தாலும் அதனை திமுக சமாளிக்கும்!'

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க. செல்வம், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Last Updated :Jun 7, 2021, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details