தமிழ்நாடு

tamil nadu

மாபெரும் சைக்கிளிங் போட்டி - ரேஸ் காரில் வந்து தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்

By

Published : Aug 28, 2022, 7:31 PM IST

இருங்காட்டு கோட்டையில் மாபெரும் சைக்கிளிங் போட்டியில் ரேஸ் காரில் வந்து அமைச்சர் மெய்யநாதன் போட்டியை தொடங்கி வைத்தார்.

மாபெரும் சைக்கிளிங் போட்டி
மாபெரும் சைக்கிளிங் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச சர்க்யூட் ரேஸ் ட்ராக்கில் மாபெரும் சைக்கிளிங் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியினை தமிழ்நாடு சைக்கிளிங் லீக் மற்றும் நிப்பான் பெயிண்ட் இணைந்து நடத்தினர்.

சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து பல்வேறு சைக்கிளிங் கிளப்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அணிகளின் சைக்கிளிங் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியினை தொடங்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டார்.

மாபெரும் சைக்கிளிங் போட்டி

அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் மெய்யநாதனை வரவேற்று அவரை நிகழ்ச்சியில் சிறப்பிக்கும் விதமாக பல கோடி மதிப்பிலான ஃபாரின் சொகுசு ரக ரேஸ் காரான மஞ்சள் நிறத்திலான போர்ஷே காரில் அமர வைத்தனர். அதன் பின் அக்காரின் முன்னாள் இரு சொகுசு ரக பைக்குகளும், பின்னால் பல வகையான கொகுசு கார்கள் அணிவகுக்க, அமைச்சர் மெய்யநாதன் ரேஸ் டிராக்கிக் மாஸ் ஆக வலம் வந்து நிகழ்ச்சி தொடங்கும் இடத்திற்கு வந்தார்.

அதைத் தொடர்ந்து மாபெரும் சைக்கிள் போட்டியினை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின் சைக்கிளிங் வீரர்கள் ஒருவருக்கு ஒருவரை முந்திச் சென்றும் ரேஸ் டிராக்கில் தங்களது சைக்கிளில் சீரி பாய்ந்தனர். மேலும் அமைச்சர் பங்கேற்ற இந்நிகழ்வில் ஒவ்வொரு சொகுசு கார்களின் பக்கத்தில் பல மாடல் அழகிகளும் போஸ் கொடுத்தவாரு நின்று பார்வையாளர்களை கவர்ந்தனர். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 3 லட்சமும், இரண்டாவது பரிசாக 2 லட்சமும்,, மூன்றாவது பரிசாக 1 லட்சமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, நிப்பான் நிறுவனர் ஆனந்த் மகேஷ், டிசிஎல் சைக்கிள் லீக் கிளப் நிறுவனர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வீடு என்பது பலரது கனவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details