தமிழ்நாடு

tamil nadu

மூன்று பணியாளர்களுக்கு கரோனா; மீண்டும் மூடப்பட்ட கார் தொழிற்சாலை!

By

Published : May 26, 2020, 1:35 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்த மூன்று பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொழிற்சாலை மீண்டும் மூடப்பட்டது.

corona-for-employees-re-closed-car-factory
corona-for-employees-re-closed-car-factory

கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. மூன்று கட்ட ஊரடங்கு உத்தரவு நிறைவுபெற்று, நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்து, தொழிற்சாலைகள் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் பணிகளைத் தொடங்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கார் தொழிற்சாலையான ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஊரடங்கு தளர்வுக்குப் பின் மே 8ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தொழிற்சாலையில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் நடந்த மருத்துவப் பரிசோதனையில் தொழிற்சாலையில் பணிபுரிந்த மூன்று பணியாளர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மேலும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கார் தொழிற்சாலை மீண்டும் மூடப்பட்டது.

இதையும் படிங்க:மணப்பாறை அருகே வாகன விபத்து - ஒருவர் உயிரிழப்பு , 3 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details