தமிழ்நாடு

tamil nadu

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By

Published : Dec 9, 2022, 5:12 PM IST

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீரானது 100 கன அடி அணையிலிருந்து திறக்கப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதினால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுமென்பதால் அடையார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இன்று மதியம் 12:00 மணிக்கு முதல் கட்டமாக 100 கன அடி நீரானது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு

மேலும் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் தற்போது மூன்றாவது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டத்தின் உயரம் 20.37 அடியும், மொத்த கொள்ளளவு 2695 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 709 கன அடியாக உள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கினால் உபரி நீர் வெளியேற்றமும் படிப்படியாக உயர்த்தப்படும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி அருகே ஊருக்குள் புகுந்த நீர்

ABOUT THE AUTHOR

...view details