தமிழ்நாடு

tamil nadu

தொடர் கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டுகிறது!

By

Published : Nov 1, 2022, 5:36 PM IST

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழுக்கொள்ளளவை எட்டிவருகிறது. இதனால் பொதுப்பணித்துறையினர் ஏரியைத்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது

காஞ்சிபுரம்: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரால், சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே, ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது வடகிழக்கு பருவமழையானது துவங்கி உள்ள நிலையில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.29 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி சுமார் 2.67 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தானது 150 கன அடியாகவும், நீர் வெளியேற்றமானது மெட்ரோ குடிநீருக்கு 108 கன அடியும், சிப்காட்டுக்கு 3 கன அடியும், நீர்ப்பாசனத்துக்கு 5 கன அடி உட்பட 150 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கனமழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இன்னும் சில நாட்களில் அதிகரிக்கக்கூடும். அப்போதைய நீரின் வரத்தைப் பொறுத்து அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடுவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியினை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details