தமிழ்நாடு

tamil nadu

சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமியை விரைவில் சந்திக்கும் முதலமைச்சர்

By

Published : Aug 23, 2022, 10:47 PM IST

சிறுமி டான்யாவிற்கு 10 மணி நேரம் முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமியின் தாயிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் சிறுமியை நேரில் சந்திப்பதாக கூறியுள்ளார்.

சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியை நிச்சயம் சந்திப்பதாக கூறினார்
சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியை நிச்சயம் சந்திப்பதாக கூறினார்

காஞ்சிபுரம்ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர்ப் பகுதியைச் சேர்ந்த, ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யாவிற்கு இன்று காலை 8 மணி அளவில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சைப் பிரிவில் முகச்சிதைவு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையில் சுமார் 10 மணிநேரமாக நடைபெற்று வந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த சிறுமி டான்யாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நேரில் சந்தித்தார். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து அவரை குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றி, தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் தாய் சௌபாக்கியாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். மேலும் விரைவில் சிறுமி டான்யாவை நேரில் வந்து சந்திப்பதாகவும், மேற்கொண்டு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார். மேலும் சிறுமியின் தாய் சௌபாக்கியா தன்னுடைய குழந்தை டான்யாவை காப்பாற்றியதற்கு கண்ணீர் மல்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசுகையில், ஒவ்வொரு மணி நேரமும் முதலமைச்சர் சிறுமியின் உடல் நிலை குறித்த தகவல்களைக்கேட்டு அறிந்ததாகவும் சிறுமிக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் உட்பட அனைத்து உதவிகளையும் செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் கூறினார்.

சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமியை விரைவில் சந்திக்கும் முதலமைச்சர்

10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த மீடியாக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை...10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர சிகிச்சை....

ABOUT THE AUTHOR

...view details