தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி ஆம்புலன்ஸ் விபத்து: செவிலி உயிரிழப்பு

By

Published : Jun 15, 2021, 11:03 AM IST

கள்ளக்குறிச்சி: ஆலத்தூர் பகுதியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த மூவரில் செவிலி ஒருவர் இன்று (ஜூன் 15) உயிரிழந்தார்.

செவிலியர்
செவிலியர்

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, அவரது மாமியார், நாத்தனார் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி, செவிலி மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

இந்நிலையில் இவர்கள் மூவரில் மீனா இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட மூவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details