தமிழ்நாடு

tamil nadu

வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை திருட்டு

By

Published : Apr 11, 2022, 2:16 PM IST

உளுந்தூர்பேட்டை அருகே வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை காணாமல்போன சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை திருட்டு
நகை திருட்டு

கள்ளக்குறிச்சி: சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் தெருவில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் புதூர்நாகலாபுரத்திற்கு வேன் மூலம் நேற்றிரவு (ஏப். 10) சென்றுள்ளனர்.

வேனின் மேற்பகுதியில் தங்களது உடைமைகளை அவர்கள் வைத்துள்ளனர். இன்று (ஏப்.11) அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு டீக்கடையில் அவர்கள் தேனீர் அருந்திவிட்டு உடமைகளை பார்த்துள்ளனர்.

நகை திருட்டு

அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 264 பவன் நகை காணாமல்போனது. இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் பெரியசாமி புகார் அளித்துள்ளார். அப்புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வேறு எங்கேனும் வாகனத்தை நிறுத்தினீர்களா? என கேட்டனர்.

அதற்கு, அவர்கள் அதிகாலை இரண்டு மணிக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தியதாக கூறியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் தகராறு: நண்பனை மாடியிலிருந்து தள்ளிவிட்ட 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details