தமிழ்நாடு

tamil nadu

கரோனாவிற்கு சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் உயிரிழப்பு!

By

Published : May 17, 2021, 10:01 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் கரோனா தொற்று காரணமாக சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் உயிரிழந்துள்ளார்.

கரோனாவிற்கு சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் உயிரிழப்பு!
கரோனாவிற்கு சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கந்தசாமிபுரத்தில் வசித்து வரும் அருண்குமார் (30). உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன்பு, காய்ச்சல் ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பேராசிரியர் அருண்குமாரின் உடலை உளுந்தூர்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் கரோனா விதிமுறையின்படி அடக்கம் செய்தனர். சித்த மருத்துவர் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details