தமிழ்நாடு

tamil nadu

மாணவர்களே வராத பள்ளி... தலைமை ஆசிரியர் மட்டும் வந்து செல்லும் விநோதம்

By

Published : Dec 6, 2022, 9:03 AM IST

Updated : Dec 6, 2022, 9:59 AM IST

கள்ளக்குறிச்சி அருகே மாணவர்களே வராத பள்ளிக்கு, தலைமை ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார்.

ச்ட்ட்ஃப்
ஃப்ச்ட்ஃப்

கள்ளக்குறிச்சிமாவட்டம், கீழப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பாடம் பயில வராத நிலையில்,அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு ஆகிய காலகட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்தப் பள்ளியில் மதிய உணவு சமைக்க, சமையலறை இல்லாத காரணத்தால் 2019 ஆம் ஆண்டு முதலே அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இருந்து உணவானது சமைத்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆண்டில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆகக் குறைந்தது. பின், நடப்பு கல்வியாண்டில் ஆறு மாணவர்களின் பெயர்கள் வருகை பதிவேட்டில் இருந்தும் ஒரு மாணவர் கூட பள்ளிக்கு வருவதில்லை எனவும் தகவல் வந்துள்ளது.

இப்பள்ளியில் படித்த மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அருகே குச்சிக்காடு, பரமாநத்தம், முரார்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்து விட்டதாகவும், போதிய அடிப்படை வசதி இல்லாததால் தங்களின் பிள்ளைகளை அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக அப்பள்ளிக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உரிய ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளியை மீண்டும் செயல்பட உதவி புரிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கூலிப்படையை ஏவி மகனைக் கொலை செய்த தொழிலதிபர்

Last Updated : Dec 6, 2022, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details