தமிழ்நாடு

tamil nadu

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் போக்சோவில் கைது

By

Published : Jul 24, 2020, 10:14 AM IST

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்

Kallakurichi young Man arrested in PosCo act
Kallakurichi young Man arrested in PosCo act

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவனின் மகன் சதீஷ் குமார் (21). இவர், அவரது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, அங்கேயே சிறுமியை விட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. குழந்தையை மீட்ட பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், குற்றவாளி சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details