தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள்.. ஆனந்த் மகேந்திராவுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்த ஓவியர்!

By

Published : Dec 29, 2022, 10:17 AM IST

கிராமப்புற அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரஷுக்கு பதிலாக கார் பொம்மையாலேயே ஆனந்த் மகேந்திரா உருவப்படம் வரைந்து ஓவிய ஆசிரியர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓவியர் வைத்த கோரிக்கை
ஓவியர் வைத்த கோரிக்கை

கார் பொம்மையால் ஆனந்த் மகேந்திரா உருவம் வரைந்த ஓவியர்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசாங்கத்தினால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் ’நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களிலிருந்து சமூக பங்களிப்பு நிதி பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார் தாங்கல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர் பேட்டையைச் சேர்ந்த சு.செல்வம், அரசு பள்ளிகளை மேம்படுத்த உதவி செய்யுமாறு மகேந்திரா நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கும் விதமாக, ஓவியம் வரைய பயன்படுத்தும் பிரஷுக்கு பதிலாக கார் பொம்மையைக் கொண்டு ஆனந்த் மகேந்திரா உருவத்தை வரைந்துள்ளார்.

"நாம் இந்த உலகில் எக்காலத்திலும் சிறந்த அழிவடையதா செல்வமாகக் காணப்படுவது நாம் கற்கின்ற கல்வி ஆகும். அந்த கல்வி செல்வத்தை நமக்கு ஒழுக்கத்துடன் சேர்ந்தவாறு போதிக்கும் இடமாகப் பள்ளிகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளை, அதிலும் கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்" என ஓவியர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சிம்பிளாக மாமல்லபுரத்திற்கு விசிட் அடித்த கூகுள் சிஇஓ!

ABOUT THE AUTHOR

...view details