தமிழ்நாடு

tamil nadu

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் உடல் - காவல் துறை விசாரணை

By

Published : Aug 14, 2020, 5:01 AM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் அருகில் சந்தேகமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆண் உடல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

suicide
suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அருகில் சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலை அருகே இருக்கும் ஒரு மரத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் காயங்களோடு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவரது உடலைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள், இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை: மனைவியின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்!

ABOUT THE AUTHOR

...view details