தமிழ்நாடு

tamil nadu

சுதந்திர தின விழா: கள்ளக்குறிச்சி ஆட்சியர் கொடியேற்றம்!

By

Published : Aug 15, 2020, 5:39 PM IST

கள்ளக்குறிச்சி: நாட்டின் 74ஆவது சுதந்திர தினா விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றி, காவல்துறையினரின் மரியாதையை ஏற்றார்.

Independence Day Celebration: Kallakurichi District Collector flag hoisting
Independence Day Celebration: Kallakurichi District Collector flag hoisting

நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் கிரண்குராலா கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் மரியாதையை ஏற்று, சமாதானப் புறாவையும் பறக்கவிட்டார்.

அதன்பின் கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த 55 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்

மேலும், மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இவ்விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாலுக் ஹக், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:74ஆவது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details