தமிழ்நாடு

tamil nadu

மதுபானம் அருந்தியவருக்கு மூக்கில் ரத்தம் - மது பிரியர்கள் பீதி

By

Published : Aug 10, 2021, 4:14 PM IST

Updated : Aug 10, 2021, 6:43 PM IST

அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்கி அருந்திய மதுப்பிரியருக்கு மூக்கில் ரத்தம் வந்ததால், அங்கு மது அருந்திக்கொண்டிருந்த மது பிரியர்கள் பீதியடைந்தனர்.

மதுப்பிரியர்கள் பீதி
மதுப்பிரியர்கள் பீதி

கள்ளக்குறிச்சி:தியாகதுருகம் ஒன்றியத்திற்குள்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. இந்நிலையில் இந்த மதுபான கடையில் இன்று முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், ரூ.150 மதிப்புள்ள மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளார்.

அப்போது மதுவை குடித்த உடனேயே மூக்கிலிருந்து ரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவர் வாங்கிய மற்றொரு மதுபான பாட்டிலில் குப்பை, பூச்சி ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செந்தில், இதுகுறித்து மதுபான விற்பனையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

மதுபானம் அருந்தியவருக்கு மூக்கில் ரத்தம் வடிவது தொடர்பான காணொலி

மதுபானக் கடையை மூடிய காவல்துறை

இதில் விற்பனையாளருக்கும், செந்திலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வரஞ்சரம் காவல் துறையினர், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மதுபான கடையை மூடினர்.

பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்திலை, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மது அருந்திய நபருக்கு மூக்கில் ரத்தம் வடிந்த சம்பவம் விரைவாக பரவியதால், இந்த சம்பவம் பிற மது பிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:வீட்டு உரிமையாளர்களிடம் மோசடி - தலைமறைவானவரை கைது செய்த காவல்துறை

Last Updated : Aug 10, 2021, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details