தமிழ்நாடு

tamil nadu

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து கார் மீது விழுந்தது!

By

Published : Dec 6, 2020, 8:25 PM IST

கள்ளக்குறிச்சி: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து கார் மீது விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tree fell down
Tree fell down

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 100 ஆண்டு பழமைவாய்ந்த ஒதிய மரம் ஒன்று இருந்தது.

கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த காரணமாக இன்று(டிச.6) திடீரென மரம் சாய்ந்து அதன் அருகில் நின்றிருந்த கார்கள் மீது விழுந்தது.

இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மரம் சாய்ந்து இடத்தில் எப்போதும் பொதுமக்கள் பல்வேறு வேலைக்காக நிற்பது வழக்கம்.

ஆனால் இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதங்கள் முற்றிலும் தவிர்க்கப்படது.

தகவலறிந்த உடன் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காரின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினார்.

திடீரென்று பழமைவாய்ந்த மரம் கார் மீது விழுந்ததில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details