தமிழ்நாடு

tamil nadu

பெண்கள் பாதுகாப்பு திட்டம்:3 நாளில் 60 அழைப்புகள்..டிஜிபி சைலேந்திரபாபு

By

Published : Jun 24, 2023, 3:26 PM IST

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த டிஜிபி சைலேந்திரபாபு பெண்கள் பாதுகாப்பு திட்டம் குறித்து கூறுகையில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாளில் 60 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

women-protection-program-3-days-60-phone-calls-c-info
பெண்கள் பாதுகாப்பு திட்டம்:3 நாளில் 60 அழைப்புகள்..டிஜிபி சைலேந்திரபாபு

ஈரோடு:தமிழகத்தில் இனி பயமின்றிப் பெண்கள் பாதுகாப்பாக வெளியே சென்று வரும் விதமாக “பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை” கடந்த ஜுன் 20 அன்று தமிழ்நாடு காவல்துறை அறிமுகம் செய்தது.

இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை பெண்களை எந்த இடத்துக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது மேலும் இதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு. தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில், பெண்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ரோந்து வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படும். மேலும் இந்தச் சேவையை அனைத்து நாள்களிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காவல்துறை தெரிவித்தது.

பணி நிமித்தமாக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் எழக்கூடும். எனினும் அச்சமயம் வெளியே செல்ல அச்சமாக இருப்பின் பெண்கள் தயங்காமல் காவல்துறையை அணுகலாம். அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார்.

பின்னர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வந்த டிஜிபியை ஈரோடு எஸ்பி ஜவகர் வரவேற்றார் பின்னர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதிகளையும் வழங்கி பாரட்டுகளை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல்துறைக்கு வந்துள்ளது. குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, பாதுகாப்புக்காக போலீஸ் ஒருவர் உடன் செல்வார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க :இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோன்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

ABOUT THE AUTHOR

...view details