தமிழ்நாடு

tamil nadu

மஞ்சள் வரத்து குறைவால் விவசாயிகள் வேதனை

By

Published : Apr 17, 2021, 8:33 AM IST

ஈரோடு: மஞ்சள் வரத்து குறைவினால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் வருத்தத்தில் உள்ளதாக மஞ்சள் வணிக உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மஞ்சள் வரத்து குறைவால் விவசாயிகள் வேதனை
மஞ்சள் வரத்து குறைவால் விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டத்திலுள்ள நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெறும். தேசிய விடுமுறை, உள்ளூர் பண்டிகைகளுக்காக கடந்த 15 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் மஞ்சள் ஏலம் இன்று தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விராலி மஞ்சள் எட்டாயிரத்து 600 ரூபாய் வரைக்கும், கிழங்கு மஞ்சள் ஏழாயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது, “விடுமுறைக்குப்பின் ஏலம் தொடங்கியும், விலை உயரவில்லை.

வரத்தும் சராசரியாகவே இருந்தது. தற்போது, சீசன் நேரமாக உள்ளதாலும், கரோனா அச்சத்தாலும் மகாராஷ்டிரா உள்பட பல பகுதிகளில் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால், வரத்து குறைந்து காணப்படுகிறது.

மஞ்சள் வரத்து குறைவால் விவசாயிகள் வேதனை

மஞ்சள் உச்சபட்ச விலையாக, ஒன்பதாயிரம் ரூபாயாக உள்ளதால், ஏற்றுமதியும் அதிகரிக்கவில்லை. ஈரோடு பகுதியில் குவிண்டால் ஏழாயிரம் முதல் எட்டாயிரத்து 600 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனையாகிறது. கடந்த இரு மாதங்களை ஒப்பிடுகையில் குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக கடத்த முயன்ற 6 டன் மஞ்சள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details