தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

By

Published : Apr 7, 2021, 10:43 PM IST

ஈரோடு : சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்.6) நடைபெற்ற வாக்குப்பதிவில் ஈரோடு கிழக்கு 66.23, ஈரோடு மேற்கு 69.35, மொடக்குறிச்சி 75.26, பெருந்துறை 82.50, பவானி 83.70, அந்தியூர் 79.74, கோபிசெட்டிபாளையம் 82.51, பவானிசாகர் 77.27 விழுக்காடு என மொத்தம் சராசரியாக 77.07 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஐ.ஆர்.டி.டி கலைக்கல்லூரி, கோபி கலைக்கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தேர்தல் மேலிடபார்வையாளர் நர்போ வாங்கிரி பூட்டியா, கோட்டாட்சியர் பழனிதேவி ஆகியோர் மேற்பார்வையில் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலமாக வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மேற்குவங்க பாஜக தலைவர் கான்வாய் மீது தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details