தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் திருட்டு.. வைரலாகும் சிசிடிவி காட்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 9:03 AM IST

Erode theft: ஈரோட்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பொருள் வாங்குவது போன்று நடித்து, அங்குள்ள பொருளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Etv Bharatஈரோட்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் திருட்டு
Etv Bharaஈரோட்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் திருட்டுt

ஈரோட்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் திருட்டு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில், பொருள் வாங்குவது போன்று நடித்து, கடையில் உள்ள பொருளை திருடிச் சென்றவர் மீது கடையின் உரிமையாளர், நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் சக்திவேல் என்பவர், சக்தி மோட்டார் மற்றும் சக்தி ஏஜன்சிஸ் என்ற பெயரில், கடந்த 25 ஆண்டுகளாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

இங்குள்ள நம்பியூர், மலையப்பாளையம், சாவக்காட்டுபாளையம், குருமந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்குபவர்கள், இந்த கடைகளில் உதரி பாகங்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்திற்கு உதிரி பாகங்கள் கேட்டு ஒருவர் சென்றுள்ளார். அந்த நேரத்தில் மற்றொரு நபர் கடைக்கு வந்து பொருட்கள் கேட்ட நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர் அவர்களுக்கு உதிரி பாகங்களை எடுத்து கொண்டிருந்துள்ளனர். இந்த நேரத்தில், முதலாவதாக வந்த நபர் கடையில், மேசையின் மீது வைத்திருந்த இருசக்கர வாகன உதிரி பாகம் ஒன்றை திருடி ஆடையில் மறைத்து வைத்து அங்கிருந்துச் சென்றுள்ளார்.

பின்னர், மேசையின் மீது இருந்த உதிரி பாகம் காணாததால் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த நபர், உதிரி பாகத்தை திருடிச் செல்லும் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, கடையில் திருடிச் சென்ற நபர் யார் என்பது குறித்து தெரியாத நிலையில், கடையின் உரிமையாளர் நம்பியூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளைக் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளார். இவ்வாறு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் திருடும் சிசிடிவி காட்சிப் பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க:வெள்ளத்தில் எண்ணெய் கசிவு எப்படி?: பசுமை தீர்ப்பாயம் குழு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details