தமிழ்நாடு

tamil nadu

பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்!

By

Published : Dec 23, 2022, 6:12 PM IST

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமார் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

ஈரோடு:சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று அமாவாசை தினம் என்பதால் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று நாடோடி திரைப்பட புகழ் நடிகரும், திரைப்பட இயக்குனருமான சசிகுமார் பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். சசிகுமார் கோயிலுக்கு வந்ததை கண்ட பக்தர்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

பண்ணாரி அம்மன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சசிகுமார் கோயிலில் முன்புறம் உள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவி நேர்த்திக் கடன் செலுத்தினார். அப்போது கோயிலுக்கு வந்த ஒரு குடும்பத்தினர் தனது கை குழந்தையை சசிக்குமாரிடம் கொடுத்தனர். குழந்தை இரு கைகளால் வாங்கிய சசிகுமார் குழந்தையுடன் பண்ணாரி அம்மனை வேண்டி வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து திருக்கோயில் அலுவலகத்திற்கு சென்ற நடிகர் சசிகுமார் உடன் கோவில் பணியாளர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அமாவாசை தினத்தன்று கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் நடிகர் சசிகுமார் கோயிலுக்கு வருகை தந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: ரேஷன் கடை விற்பனையாளர்கள் நியமனம் - உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றக்கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details