தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு

By

Published : Oct 16, 2022, 5:04 PM IST

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு:காவிரி நீர் பிடிப்புப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் ஒரு லட்சத்து 80ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதன் காரணமாக காவிரிக்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினர் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பாதிக்கப்பட்டவர்கள் வருவாய்த்துறையினர் மூலமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பவானி பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு; காவல் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details