தமிழ்நாடு

tamil nadu

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த உறவினர் கைது!

By

Published : May 2, 2023, 2:22 PM IST

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுமியின் உறவினர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த உறவினர் கைது
13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த உறவினர் கைது

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழாவிற்குச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை 3 பேர் வழி மறித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை கடத்திய 3 பேரும், கடத்தியவர்களில் ஒருவரது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

அதேநேரம், இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனால் சிறுமி அச்சம் அடைந்த நிலையில், மறுநாளும் அதே போன்று சிறுமியை மிரட்டி, அதே வீட்டில் வைத்து மீண்டும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் சிறுமி மிகவும் சோர்வடந்து காணப்பட்டுள்ளார்.

பின்னர், பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கையில், சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் உறவினர் ஒருவரும் கடந்த 3 மாத காலமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கட்சியில் சேரும் பெண்களை போட்டோ எடுத்து மிரட்டிய பாஜக நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details