தமிழ்நாடு

tamil nadu

'பிரச்னைக்குரிய கருத்துகளை ரஜினிகாந்த் தேடி தேடி பேசிவருகிறார்' - ஈஸ்வரன் குற்றச்சாட்டு

By

Published : Jan 19, 2020, 3:23 PM IST

ஈரோடு: பிரச்னைக்குரிய கருத்துகளை  நடிகர் ரஜினிகாந்த் தேடி தேடி பேசி வருவதாகவும், துக்ளக் விழாவிற்கு சென்று முரசொலி பற்றி பேசியிருக்கக் கூடாது என்றும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

The Kalingarayan Canal
The Kalingarayan Canal

காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், 'தமிழ்நாடு முழுவதும் நீர் மேலாண்மையைச் சிறப்பாக செய்பவர்களுக்கு என்று விருதினை காலிங்கராயன் தினத்தன்று அரசு உருவாக்கி, நீர் மேலாண்மையை மேற்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டும். இது போன்று விருதினை வழங்குவதின் மூலமாக தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

மேலும், ' காலிங்கராயன் கால்வாய் மாசடைந்துள்ளது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது கட்சியின் சார்பில் பேசி வருவதாகவும், இந்த கால்வாயை இளைஞர்கள் முன்னெடுத்து தூய்மைப் படுத்த வேண்டும்' என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

'பிரச்னைக்குரிய கருத்துகளை ரஜினிகாந்த் தேடி தேடி பேசி வருகிறார்'

அதனையடுத்து பேசிய அவர், 'நடிகர் ரஜினிகாந்த் பிரச்னைக்கு உரிய கருத்துகளைத் தேடி தேடி பேசி வருகிறார். துக்ளக் விழாவிற்குச் சென்று முரசொலி பற்றி பேசி இருக்கக் கூடாது. விளம்பரத்துக்காக பிரச்னைக்கு உரிய கருத்துகளை பேசுகிறார்' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்றும், தலைவர்கள் சில கருத்துகளை பேசுவதும் அந்த கருத்துகள் நாளடைவில் மறைந்து போவதும் வழங்கமான ஒன்றுதான் எனவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மக்காச்சோளம் கதிர் அடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details