தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் விசைத்தறித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

By

Published : Jun 29, 2021, 11:27 AM IST

விசைத்தறிக் கூடங்கள் 33 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் விசைத்தறியாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விசைத்தறி தொழிலாளர்கள்
விசைத்தறி தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் எட்டு லட்சம் விசைத்தறியில் நேரடியாக பத்து லட்சம் பேரும், மறைமுகமாக பத்து லட்சம் பேரும் பணி செய்கின்றனர். தினமும் 150 கோடி ரூபாய் மதிப்பில் 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும், வாரத்துக்கு 45 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும் என்பதால் ஒரு தொழிலாளிக்கு வாரம் மூன்றாயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.

தற்போது, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விசைத்தறிக் கூடங்கள் நேற்றுமுதல் 33 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம் என்ற இந்த அறிவிப்பால் விசைத்தறியாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விசைத்தறித் தொழிலாளர்கள்

ஏழு வார காலத்திற்குப் பின், மீண்டும் இயல்புநிலை திரும்பி, முழு உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. நேரடியாக 50 ஆயிரம் விசைத்தறித் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்களும் ஆயத்தமாகிவருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதியைப்போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாறும் - அமைச்சர் எ.வ. வேலு

ABOUT THE AUTHOR

...view details