தமிழ்நாடு

tamil nadu

வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை திருட்டு - போலீஸ் விசாரணை

By

Published : Jan 26, 2022, 8:09 AM IST

கோபிச்செட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகையை திருடிச் சென்றவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை திருட்டு

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு வெங்கடாசலம், ரகுநாதன் என இரண்டு மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ரகுநாதன், பழனயம்மாளின் வீட்டின் அருகிலேயே குடியிருந்து வருகிறார். பழனியம்மாள் கடந்த 22ஆம் தேதி கோயம்புத்தூரிலுள்ள மகன் வெங்கடாசலம் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன 26) பழனியம்மாளின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது ரகுநாதனுக்கு தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ரகுநாதன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு 14 பவுன் நகைகள் திரடு போனது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கார் கண்ணாடியை உடைத்த 2 இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details