தமிழ்நாடு

tamil nadu

கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் விற்பனையா? - நிலத்தை வாங்கி வீடு கட்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

By

Published : Jul 17, 2023, 7:30 PM IST

ஈரோடு அருகே கோயிலுக்கு தானமாக மைசூர் மகாராஜா காலத்தில் வழங்கிய 8 ஏக்கர் நிலத்தை, பல்வேறு நபர்களுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட சம்பவத்தால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் விற்பனையா? - நிலத்தை வாங்கி வீடு கட்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஈரோடுஅருகே உள்ள சித்தோடு கங்காபுரம் கன்னிமார் விநாயகர் மாரியம்மன் மலைக்கோயிலுக்குச் சொந்தமாக 8 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை 1886ஆம் ஆண்டு மைசூர் மகாராஜா கோயிலில் நல்ல காரியங்களுக்கும் கோயிலின் பூஜைகள் நடத்துவதற்கும் தானமாக வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், கங்காபுரம் பகுதியில் மணியக்காரர் என்று கூறப்படும் கிராம நிர்வாக அலுவலராக அப்போது பணியாற்றிய முத்து வெங்கட்ராயன் கவுண்டர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, நிலத்தை பயன்படுத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் வருவாய் கோட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனு தள்ளுபடி ஆனதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மேல்முறையீடு செய்து நிலத்தை மீட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்த கிராம நிர்வாக அலுவலரை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிமன்றத்திலும் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என உத்தரவு வழங்கப்பட்டது.

இருந்தபோதிலும், கிராம நிர்வாக அலுவலராக இருந்த முத்து வெங்கட்ராயன் கவுண்டர் மறைவுக்குப் பின்பு அவரது வாரிசுகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என உத்தரவிட்டதுடன் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிலத்தை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மூலமாக அளவீடு செய்து மீட்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலம் தற்போது பல்வேறு நபர்களுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கப்பட்டு, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டும் வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் ஆகியோர் காவல் துறையின் பாதுகாப்புடன் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டுமனைகளாக வாங்கி, அதனை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும்; பல பேர் இந்த வீட்டு மனைகளையும் வீடுகளையும் பலரிடம் விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது வாங்கியவர்களும் வீடுகளை கட்டியவர்களும் வெகுவாகப் பாதிக்கபட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:நீ சரியில்லை, மூட்டை கட்டிக்கொண்டு போ - விளையாட்டு அலுவலரை காட்டமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details