தமிழ்நாடு

tamil nadu

ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்ட வாகனத்தை மாநகராட்சிக்கு வழங்கிய யங் இந்தியன்ஸ்!

By

Published : May 30, 2021, 7:22 AM IST

ஈரோடு: மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக, ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்ட வாகனத்தை, மாநகராட்சிக்குத் தன்னார்வ அமைப்பு வழங்கியுள்ளது.

Oxygen
ஆக்சிஜன் செறிவூட்டிகள்

ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நேற்று(மே.29) மட்டும் 1,731 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகப்படியான நோயாளிகள் எண்ணிக்கையால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, 'யங் இந்தியன்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பு, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, ஈரோடு மாநகராட்சி அலுவலர்களிடம் வழங்கினர்.

யங் இந்தியன்ஸ் அமைப்பு வழங்கிய வாகனம்

இதுகுறித்து 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் நிர்வாகி கூறுகையில், " கரோனா பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே சமயத்தில் 8 கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியளிக்க முடியும். மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக இதில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details