தமிழ்நாடு

tamil nadu

'கேந்திர வித்தியாலாவில் தமிழ் கட்டாயம் இல்லை என்பது தற்போதுதான் தெரியும்'

By

Published : Feb 10, 2021, 1:56 PM IST

ஈரோடு: கேந்திர வித்தியாலாவில் தமிழ் கட்டாயம் இல்லை என்பது தற்போதுதான் தெரியவந்தது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Minister
Minister

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,240 நபர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பணி ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், "அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இந்தியாவில் தமிழ்நாடு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் கொள்கை. 24 ஆயிரம் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றபோதும் 1,121 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

பெற்றோர்களின் கனவை இளைஞர்கள் நிறைவேற்ற வேண்டும். ஐடி முடித்தவுடன் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக படிப்பிற்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கொளப்பலூருக்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடை பூங்காவில் 7,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். அவர்கள் தங்குவதற்கும் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. சுயநிதி மூலம் தொழில் தொடங்க 25 நபர்களுக்கு நிதி வழங்கப்படவுள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "இன்று (பிப். 9) நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 85 நபர்களுக்கு மேலை நாடுகளில் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை முகாம் மூலம் வேலை கிடைத்துள்ளது.

நாவோதி கேந்திர வித்தியாலா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பதில்லை என்ற தகவல் இப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. இது சம்பந்தமாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவார். தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளைத் திறந்தபின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்குப் பேருந்து வசதி' - செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details