தமிழ்நாடு

tamil nadu

சொந்த கிராமத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பரப்புரை!

By

Published : Apr 4, 2021, 4:22 PM IST

கோபிசெட்டிபாளைம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சொந்த கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் செங்கோட்டையன்
சொந்த கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் பரப்புரைக்கு இறுதி நாள் இன்று (ஏப்ரல் 04) என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொந்தத் தொகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் ஒன்பதாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் செங்கோட்யைன் தனது சொந்தத் தொகுதியில், சொந்த ஊராட்சியான குள்ளம்பாளைத்தில் அதிகாலை முதல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சொந்த கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் செங்கோட்டையன்

சொந்த கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சருக்கு, அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். மேலும் குள்ளம்பாளையம் கிராமத்தில் சந்து பொந்துகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் நடந்து செல்ல முடியாத இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொண்டார். ஒரு வீடு கூட விடுபடாமல் அனைத்து வீடுகளுக்கும் சென்ற அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்தங்களை நலம் விசாரித்ததோடு, குழந்தைகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க:பெருங்குறையுடன் தேர்தலை புறக்கணிக்கும் குருங்குளம்

ABOUT THE AUTHOR

...view details