தமிழ்நாடு

tamil nadu

கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கத் தடை!

By

Published : Oct 23, 2019, 12:01 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

kodivery dam

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவி மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிகக்வும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

12 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமையாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய நான்கு தாலுகாக்களில் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுகப்பட்டுள்ளது.

கொடிவேரி தடுப்பணை

மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, தீயணைப்புத்துறை பேரிடர் மீட்புக்குழுவினர் என அனைத்து தரப்பிலும் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு பணியிலும், முன்னெச்சரிக்கை நடடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என அனைத்துத்துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

பவானிசாகர் அணையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

Intro:Body:tn_erd_03_sathy_kodivery_dam_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடைவித்துள்ளனர்..

ஈரோடுமாவட்டம் பவானிசாகர் அணையின் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவி மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு குளிகக்வும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மிகப்பெரிய மண் அணையாகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மற்றும் கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து தற்போது அணை 102 அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்பும் நிலை உள்ளதால் 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 102 அடி உயரத்தை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 12 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமையாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி ஆகிய நான்கு தாலூகாக்களில் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுகப்பட்டுள்ளது. மேலும் பொதுபணித்துறை வருவாய்துறை தீயணைப்புத்துறை பேரிடர் மீட்புக்குழுவினர் என அனைத்து தரப்பிலும் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு பணியிலும் முன்னெச்சரிக்கை நடடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ துணி துவைலக்கவோ செல்பி எடுக்கவோ வேண்டாம் என அனைத்துத்துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details