தமிழ்நாடு

tamil nadu

கிடுகிடுவென உயர்ந்த மல்லிகைப்பூ.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

By

Published : Nov 30, 2022, 6:14 PM IST

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை பல மடங்கு உயர்ந்து கிலோ 2800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு:சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்கள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்களுக்கு மல்லிகைப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப்பூ செடிகளில் உற்பத்தி குறைந்து அவற்றின் வரத்து குறைந்தது.

இதன் காரணமாக, நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கிலோ 1220 ரூபாய்க்கு மல்லிகைப்பூ விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று (நவ.30) பல மடங்கு விலை உயர்ந்து, மல்லிகை பூ ஒரு கிலோ 2800 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், மல்லிகைப் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலத்தில் ரூ.3000-யை எட்டிய மல்லிகைப்பூ விலை!

இதேபோல், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், காக்கட்டான் பூ 625 ரூபாய்க்கும், செண்டுமல்லி 29 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 39 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து குறைந்து விலை உயர்ந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பூக்களை ஏலம் எடுத்தனர். வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை பல மடங்கு உயர்ந்த விற்பனையான நிலையில் முல்லை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மற்ற பூக்களின் விலை நிலவரத்தில் பெரிய மாற்றம் இல்லை.

இதையும் படிங்க: தேனியில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details