தமிழ்நாடு

tamil nadu

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து நூதன மோசடி!

By

Published : Feb 24, 2021, 7:04 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஏடிஎம்மை மாற்றி கொடுத்து, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.58,800 திருடப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம்  ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து நூதன மோசடி
சத்தியமங்கலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து நூதன மோசடி

உக்கரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ். இவர் புதன்கிழமை பணம் எடுப்பதற்காக சத்தியமங்கலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்துள்ளார். ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயற்சித்த போது பணம் வரவில்லை. அதன் பின் ஒரு வழியாக சிறிது நேரம் கழித்து ரூ.5 ஆயிரம் எடுத்துள்ளார். அருகில் இருந்து இதனை பார்த்த நபர் நடராஜுக்கு உதவி செய்வது போல நடித்துள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் நடராஜிடம் ஏடிஏம் கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுக்க உதவுவது போல நடித்து, வாங்கிய கார்டுக்கு பதிலாக மற்றொரு கார்டை கொடுத்து விட்டார். பின்னர் நடராஜனுக்கு தெரியாமல் ரூ.58, 800 எடுத்துள்ளார். பணம் எடுத்தது குறித்த எந்தத் தகவலும் செல்போனுக்கு வரவில்லை.

இந்நிலையில் நடராஜன் சத்தியமங்கலம் வங்கி கிளையில் பணம் எடுக்க முயற்சித்த போது, அவரது வங்கிக்கணக்கில் பணமில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நடராஜன் வங்கி கிளை மேலாளரிடம் புகாரளித்தார்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் பணமெடுத்திருப்பது தெரியவந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஏடிஎம் கார்டு மாற்றிக் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :ஆஸ்திரேலியாவில் விரைவில் தடையை நீக்குவோம் - பேஸ்புக் நிறுவனம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details